தமிழக சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை சபாநாயகர் மு. அப்பாவு தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் கூட்ட நெரிசல் மற்றும் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து அவைக்கு வந்தனர். இதை பார்த்த சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாகக் கூறினார்:  “அனைவருக்கும் ஒன்றாக பி.பி. (Blood Pressure) அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன்!”

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரகுபதி பேசும்போது, “சிறையில் அடையாளப்பட்டை அணிந்திருப்பது போல் அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர்,”
என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும் சபாநாயகர் மற்றும் அமைச்சரின் இந்த நகைச்சுவை குறிப்புகளால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.