அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் கேரள கிளைகளில் பணிபுரிந்து வந்த 900 ஊழியர்கள், வெள்ளிக்கிழமை காலை வேலைக்கு வந்தபோது திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டனர்.
கொச்சி மற்றும் கோழிக்கோடு அலுவலகங்களில் நடந்த இந்த அதிரடி நீக்கத்தால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தங்களுக்கு எந்தவித முன்னறிவிப்போ அல்லது நோட்டீஸ் காலமோ வழங்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, கேரள அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டது.
உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் தற்காலிக முடிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை செயலாளருடன் நிர்வாகம் நடத்தவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை அதிகாரிகளின் உத்தரவுப்படி தகுந்த இழப்பீடு வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
