டெல்லி ரயில் நிலையத்தில் 5 பேர் கொண்ட திருநங்கைகள் கும்பல், பயணி ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடூரமான முறையில் திடீர் தாக்குதல் நடத்தியுள்ள நெஞ்சை பதறவைக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர் பாதி ஆடைகளைக் களைந்தபடி, அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடமே பயங்கரமாக ஆக்ரோஷம் காட்டி கத்தும் அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியுள்ளன.
அப்போது அங்கிருந்த பயணிகள் அனைவரும் இந்த அதிதிவிபரீத நாடகத்தை உறைந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கெஞ்சியும் பார்க்காமல் அந்த நபர் மீது திருநங்கைகள் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதால், அவரது மனைவி மற்றும் மகள் அவரைப் பாய்ந்து காப்பாற்ற முயன்றுள்ளனர்.
🚨Shocking Assault at Delhi Railway Station 😯
A man was brutally attacked by a group of 5 transgenders at a busy Delhi station. When his wife and daughter rushed to rescue him, they too were allegedly assaulted. Eyewitnesses described the attack as sudden and violent.
The… pic.twitter.com/LQaM0kPPYp
— Siraj Noorani (@sirajnoorani) July 3, 2026
ஆனால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தடுத்த மனைவி மற்றும் மகள் என்றும் பாராமல் அவர்கள் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தியதில், குடும்பத்தினர் மூன்று பேரும் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கான அசல் காரணம் என்னவென்று இன்னும் தெரியாத நிலையில், டெல்லி ரயில்வே போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து, ரயில் நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
