பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  தங்களது முன்னணி வீரர்கள் பலருக்கு வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாட தடையில்லா சான்றிதழை  என்ஓசி அதிரடியாக வழங்கியுள்ளது.

இதில் விசேஷம் என்னவென்றால், ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் இந்திய உரிமையாளரான காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் லீட்ஸ்  அணிக்காக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சன்ரைசர்ஸ் பிரான்சைஸ் அப்ரார் அகமதை சுமார் 2.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தபோது, இந்திய சமூக வலைதளங்களில் காவ்யா மாறனுக்குஎதிராக கடுமையான விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. இருப்பினும், சன்ரைசர்ஸ் நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் வாரியமும் அப்ரார் அகமதுக்கு அனுமதி அளித்துள்ளதால் அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ளது.

“>

அப்ரார் அகமது மட்டுமின்றி ஷதாப் கான், ஷபிக் உள்ளிட்ட 21 வீரர்களுக்கு பல்வேறு வெளிநாட்டு தொடர்களில் விளையாட பிசிபி அனுமதி அளித்துள்ளது, குறிப்பாக குலோபல் வட்டார சூப்பர் லீக் தொடருக்காக அதிகபட்சமாக 16 வீரர்களுக்கு என்ஓசி வழங்கப்பட்டுள்ளது கிரிக்கெட்டில் அப்துல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.