ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஒவ்வொரு வாரமும் லாட்டரி குலுக்கல் நடைபெறுவது வழக்கம். பிக் டிக்கெட் என்ற பெயர் கொண்ட இந்த லாட்டரியில் இந்தியரான ரமேஷ், 10 மில்லியன் திர்ஹாம்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 22 கோடி வென்றுள்ளார். கத்தார் நாட்டில் டெக்னீசியனாக பணியாற்றும் ரமேஷ் 10 நண்பர்களுடன் சேர்ந்து இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.