ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கை அளித்துள்ளது. ராம்நாத் கோவிந்த் குழு தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை பெற்று அறிக்கை அளித்துள்ளது.

18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கருத்து கேட்டு 191 நாட்களுக்குப் பின் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்றும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடத்துவதால் பல பலன்கள் இருப்பதாகவும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, சட்ட வல்லுநர் ஹரிஷ் சால்வே ஆகியோர் உள்ளனர்.

2029 ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களில் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றி அமைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
.