வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில், இந்திய இரயில் பயணத்தைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், சொகுசான ஏசி பெட்டியில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கும், அதே நேரத்தில் எதிரே செல்லும் மற்றொரு இரயிலின் பொதுப் பெட்டியில் இடமில்லாமல் வாசலில் தொங்கியபடியும், முண்டியடித்துக் கொண்டும் பயணிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இடையிலான மிகப்பெரிய பொருளாதார இடைவெளி அப்பட்டமாகத் தெரிகிறது.
மேலும் மகிழ்ச்சியைப் பணத்தால் வாங்க முடியாது என்று சிலர் கூறினாலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், கண்ணியமான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழவும் பணம் ஒரு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது என்பதை இந்த காட்சிகள் நமக்குக் கசப்பான உண்மையாக உணர்த்துகின்றன.
ट्रेन के डब्बे सिखाते हैं,
आपको पैसे क्यूं कमाने चाहिए… pic.twitter.com/ly3yQvCO3N— Vatsala Singh (@_vatsalasingh) April 19, 2026
“>
இந்த வைரல் வீடியோ, மக்கள் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதற்கான ஒரு நிதர்சனமான பதிலைத் தருகிறது. ஓடும் இரயிலின் வாசலில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணிப்பவர்களில் பலருக்கும், போதுமான வசதி இருந்தால் நிச்சயமாக ஏசி பெட்டியில் பயணிக்கவே விருப்பம் இருக்கும். ஆனால், பணப்பற்றாக்குறை அவர்களை இத்தகைய துயரமான சூழலுக்குத் தள்ளுகிறது.
இதனால் சமூக வலைதளங்களில் இதைப் பார்த்த பயனர்கள், “இன்று பணம் இருந்தால் தான் உலகில் மதிப்பும் வசதியும் கிடைக்கிறது” என்றும், “நாம் ஏன் ஓயாமல் உழைக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு வீடியோவே சாட்சி” என்றும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். உழைப்பின் அவசியத்தையும், பொருளாதார ரீதியாகத் தன்னைத் தற்காத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் இந்தச் சம்பவம் ஒரு பாடமாக முன்வைக்கிறது.
