வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை பின்பற்றவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான பேச்சு. ஒரு மத்திய மந்திரி இப்படி பேசுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் கண்டிப்பாக நடக்காது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சாமியார் மற்றும் ஒரே சாப்பாடு இதெல்லாம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறினார். மேலும் முன்னதாக மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட இருப்பதால் கண்டிப்பாக அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

மேலும் மாநிலத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே மாதிரியாக தேர்தலை நடத்தி முடித்துவிட்டு பின்னர் 100 நாட்கள் கழித்து உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசும் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.