நாட்டில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு pf என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிலையில் EPFO என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில் பொருளாதார சிரமம் இல்லாமல் வாழ்வதற்கு இந்த திட்டம் மிகுந்த பயனுள்ள ஒரு திட்டமாகும். இந்நிலையில் EPF கணக்கில் மிஸ்டு கால் மூலமாக  இருப்பை தெரிந்து கொள்ள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் செல்போன் நம்பரை இணைத்திருப்பது மிகவும் அவசியம். அதன்பிறகு இணைக்கப்பட்ட செல்போனிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். மிஸ்ட் கால் கொடுக்கும் போது தானாகவே அழைப்பு சென்று கட்டாகிவிடும். பின்னர் சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட நம்பருக்கு ‌EPF இருப்பு குறித்த குறுந்தகவல் வந்துவிடும். மேலும் இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.