மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கோந்திகேடா பகுதியில், தொழிலதிபர் தேவகிருஷ்ண புரோஹித் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியே குற்றவாளி எனத் தெரிந்து போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆரம்பத்தில் தனது வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு தனது கணவரைக் கொன்றுவிட்டதாக மனைவி பிரியங்கா போலீஸாரிடம் கதறி அழுது நாடகமாடியுள்ளார். போலீஸாரைத் திசைதிருப்ப வீடு முழுவதும் பொருட்களைச் சிதறவிட்டு கொள்ளை நடந்தது போன்ற தோற்றத்தையும் அவர் ஏற்படுத்தியிருந்தார்.

​ஆனால், போலீஸாரின் தீவிர விசாரணையில் பிரியங்காவிற்கும் கம்லேஷ் என்ற நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது அம்பலமானது. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் தேவகிருஷ்ணனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர். இந்தச் சதித் திட்டத்தின்படி தனது காதலனுடன் இணைந்து கணவனைத் தீர்த்துக்கட்டிய பிரியங்கா, பின்னர் அதை ஒரு கொள்ளைச் சம்பவமாக மாற்ற முயன்றுள்ளார். தற்போது பிரியங்காவையும் அவரது காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.