மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய திருமணக் கொண்டாட்டத்தில், பொறாமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக ஒரு கசப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு புதுமணப் பெண்ணின் அழகைக் கெடுக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில், அவரது நாத்தனார் மணப்பெண்ணின் முகத்தில் கறுப்பு பெயிண்ட்டை ஊற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த வேளையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்தக் கொடுரமான செயலுக்குப் பின்னால் இருந்த காரணம் தான் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது. தனது சகோதரனின் திருமணத்தில் தனக்குச் சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், புதுப்பெண்ணுக்கு அதிகக் கவனம் கிடைப்பதாகவும் அந்த நாத்தனார் ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தீராத பொறாமையினால் ஒரு புனிதமான உறவின் தொடக்கத்தையே அவர் விஷமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மணப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.