இந்திய ரயில்வேயின் பாதுகாக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு, குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களில் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கோர்வா – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ‘S1’ ஸ்லீப்பர் கோச்சில் ஒரு பெண் பயணி பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பெட்டியில் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் அருகில் வந்து அவரது அனுமதி இன்றி கால்களைத் தொட்டு அநாகரீகமாக நடந்துள்ளார்.
भारतीय रेल के स्लीपर कोच S1 अपराधियों का अड्डा बन गया है KRBA TVCN SF EXP (22647) की घटना!
महिला के अनुसार: कोच खाली था, अचानक एक व्यक्ति मेरे पैर छूने लगा। जब मैं डरकर खिड़की की ओर हटी, तो उसने अपने कपड़े उतार दिए, अश्लील हरकतें कीं और शरीर के निचले भाग से बाल नोंचकर सीट पर… pic.twitter.com/YG1DhkOAgM
— Karishma Aziz (@KarishmaAziz_) April 17, 2026
பயந்துபோன அந்தப் பெண், அவரிடமிருந்து விலகி ஜன்னல் ஓரமாக அமர்ந்துள்ளார். ஆனால், அந்த நபர் தனது ஆடைகளை களைந்து, ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டதுடன், தனது உடலில் இருந்து முடிகளை பிய்த்து இருக்கையின் மீது வீசி எறிந்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை அந்தப் பெண் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
