ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது.

மேலும் அந்த சிகரெட் விற்பனையில் ஈடுபடும் 15 இணையதளங்களுக்கும் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்துக்கு எதிரானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.