இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சுயதொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும் பெண்களுக்காக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையில் உத்யோகினி என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் கிடைக்கும். மாற்றுத்திறனாளி மற்றும் கணவனை இழந்த பெண்கள் தகுதியின் அடிப்படையில் மூன்று லட்சத்திற்கும் மேல் பெறலாம் எனவும் 18 முதல் 55 வரை உள்ள பெண்கள் இதற்கு தகுதி உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரெடிட் மற்றும் சிபில் ஸ்கோர் மதிப்பை நன்றாக இருக்க வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள வங்கிகளை தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.