பெற்ற தாயே தனது பச்சிளம் குழந்தையை ஈவுஇரக்கமின்றி காலால் எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மனிதநேயமற்ற இந்தச் செயலை கண்ட பலரும், “பெற்ற தாயால் இப்படி ஒரு கொடூரத்தை செய்ய முடியுமா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். மாஸ்கோ நியூஸ் எனும் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், படிக்கட்டு அருகே நின்றுகொண்டு பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது அருகில் நின்ற தனது சிறு குழந்தையை திடீரென ஆத்திரத்தில் காலால் உதைத்துத் தள்ளுகிறார். அந்தப் பெண்ணின் இந்த மிருகத்தனமான தாக்குதலால் நிலைகுலைந்த மற்றுமொரு குழந்தையும் அங்கேயே பயத்தில் நடுங்கியபடி உறைந்து போயுள்ளது.
<a href="http://
‼️🚨⚡️مشاهد صادمة..
كاميرا مراقبة توثق تعامل إحدى الأمهات مع طفلها الصغير. pic.twitter.com/UNwIqimwOZ
— موسكو | 🇷🇺 MOSCOW NEWS (@M0SC0W0) January 9, 2026
“>
இந்த வைரல் வீடியோ இணையத்தில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள நிலையில், பலரும் அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
விலங்குகள் கூடத் தன் குட்டிகளிடம் இப்படி நடந்து கொள்ளாது, இவர் ஒரு தாயாக இருக்கவே தகுதியற்றவர்” என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், வீடியோவில் பதிவாகியுள்ள இந்த வன்முறைச் செயல் உலகம் முழுவதும் உள்ள குழந்தைப் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
