இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் புத்தாண்டை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. வழக்கமான டேட்டா உடன் கூடுதலான ஓடிடி தளங்களுக்கான இலவசஅணுகல்  மற்றும் கூடுதல் வேலிடிட்டி உடன் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் VI நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வருடம் முழுவதும் பயன்படுத்தும் விதமாக 3,199 பல சலுகைகளுடன் வழங்க உள்ளது.

இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். வழக்கமாக இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். கூடுதலாக ஒரு வருடம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவுக்கான இலவச அணுகலை அனுபவிக்கலாம். அதனைப் போலவே 3099 ரூபாய் திட்டத்தில் ஆண்டு முழுவதற்கும் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 sms என இவற்றுடன் ஒரு வருடம் முழுவதும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைப்சனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.