நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக சீமானிடம் கேட்டபோது அரசியல் மற்றும் திரை உலகம் குறித்து நிறைய விஷயங்கள் பேசியதாக கூறினார். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறியதாகவும் அதைத்தான் அமைப்பு சரியில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார். தேர்தல் அரசியல் மட்டுமே செய்யப்படுகிறது மக்கள் அரசியல் செய்யப்படவில்லை. இதைத்தான் ஐயா ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார்.
அதை நான் அமைப்பு சரியில்லை என்று கூறுகிறேன் என்றார். இதற்கு முன்பு சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் கூறியதற்கு சீமான் அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருப்பார். அதாவது என்ன சிஸ்டம் சரியில்லை. உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் இப்ப சிஸ்டம் சரியில்லன்னு சொல்றீங்க. அப்போ உங்க சிஸ்டம் மட்டும் சரியா இருந்துச்சா. இவ்வளவு நாள் எங்க போனீங்க. உங்கள மாதிரி ஆளுங்க இப்படி பேசிட்டு அலையுறதால தான் தமிழ்நாட்டில் சிஸ்டம் கெடுகிறது. மேலும் சிஸ்டம் சரியில்லை என்று ஒரு வார்த்தையில் சொல்லிட்டு திரிறது தான் உங்கள் வேலையா என்று அவர் பேசி உள்ளார். மேலும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஒன்றாக இணைத்து சீமானை விமர்சித்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.
View this post on Instagram
