நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, திமுக கூட்டணி உடையாதா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசின் சிறப்பான திட்டங்களை பார்த்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல் என கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் திமுக அரசு தான் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது. நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரை வைக்காமல் கரப்பான் பூச்சி பெயரையா வைக்க வேண்டும் என எடப்பாடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
