உத்திரபிரதேச மாநிலத்தில் குந்தர்கி தொகுதி உள்ளது. இது சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் நிலையில் தற்போது பாஜக குந்தர்கி பகுதியை கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதியில் 65 சதவீதம் முஸ்லிம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல கட்சிகள் மொத்தம் 11 வேட்பாளர்களை நியமித்தனர்.
இந்த 11 பேரும் முஸ்லிம் வேட்பாளர்கள். இவர்களை எதிர்த்து பாஜக சார்பில் ராம்வீர் தாக்கூர் களமிறங்கினார். இவர் இந்து வேட்பாளர். இவர் சிங்கிளாக ஒரே ஒரு இந்துவாக களமிறங்கிய நிலையில் 11 இந்து வேட்பாளர்களையும் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்களுடன் சகோதர பாசத்துடன் இவர் பல ஆண்டுகளாக பழகி வருவது தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
