தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திருச்சியில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின்  ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில், திருச்சியைச் சேர்ந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்கு திமுகவின் “கூப்பன் அரசியல்” தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களின் சுயமரியாதையைச் சிறுமைப்படுத்தும் விதமாக ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்களை வழங்கி, வாக்குகளை விலைக்கு வாங்க நினைக்கும் திமுகவின் அற்பத்தனமான அரசியலே இந்தத் துயரத்திற்கு வழிவகுத்துள்ளதாக அவர் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

“>

 

தவெக நிர்வாகியின் இந்த நேரடித் தாக்குதலால் திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் வலுத்து வருகிறது.