தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்வைத்துள்ள விமர்சனங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, தற்போது அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் அப்பதவிக்கு வந்தவுடன் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளதை செங்கோட்டையன் கடுமையாகச் சாடியுள்ளார்.

“சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா என தனக்கு உதவிய அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டார்” எனத் தெரிவித்த அவர், அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என்று அடம் பிடித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது நயினார் நாகேந்திரனுடன் அதே கூட்டணியில் இணைந்திருப்பது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை என்ன பாவம் செய்தார் என்றும், அரசியல் லாபத்திற்காக ஒருவரைப் பழிவாங்கும் போக்கை ஈபிஎஸ் கையாளுவதாகவும் செங்கோட்டையன் தனது பேட்டியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.