பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள  ரயில்நிலையத்தில் திங்கள்கிழமை அன்று ஒரு பயங்கர ரயில் விபத்து அரங்கேறியுள்ளது.

நடைமேம்பாலத்தைப் (Footover Bridge) பயன்படுத்தாமல், நேரத்தை மிச்சப்படுத்த தண்டவாளத்தை அத்துமீறி கடக்க முயன்ற இரண்டு பெண்கள், அதிவேகமாக வந்த நியூ (New Farakka Express) ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Neemuch Alert (@neemuchalert)

ரயில் மிக வேகமாக வந்ததால், அந்தப் பெண்கள் சுதாரிப்பதற்குள் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.

உயிரிழந்தவர்கள் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், தண்டவாளத்தைக் கடப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், பயணிகள் எப்போதும் மேம்பாலத்தையே பயன்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.