
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள், பறவைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிக அளவில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. பொதுவாகவே
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஆன தொடர்புகளை காட்டும் பல வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக நாய் மற்றும் குரங்கு போன்ற விலங்குகள் மனிதர்களிடம் மிகவும் நெருக்கமாக பழகக் கூடியவை. அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் நபர் ஒருவர் தோழர்களுடன் பகிர்ந்து கொள்வது போல ஒரு தர்பூசணி பழத்தை மிக அழகாக குரங்குடன் தாராளமாக பகிர்ந்து கொள்கிறார். ஒரு பெரிய தர்ப்பூசணி பழத்திற்கு ஒரு பக்கம் ஒரு நபரும் மறுப்பக்கம் ஒரு குரங்கும் அமர்ந்து கொண்டு தர்பூசணியை இரண்டு தொண்டுகளாக வெட்டி இருவரும் சாப்பிடுகின்றனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Eating a watermelon together.. 😊 pic.twitter.com/SLnotXCdZL
— Buitengebieden (@buitengebieden) July 30, 2023