மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்வது என்பது ஒரு சவாலான விஷயமாகக் கருதப்படுகிறது.

அங்குள்ள கடுமையான கூட்ட நெரிசலில், கால் வைக்கக் கூட இடமில்லாத சூழலில், விளிம்பு வரை தண்ணீர் நிரம்பிய கண்ணாடி கிளாஸை கையில் பிடித்துக்கொண்டு ஒருவர் பயணம் செய்தால் என்னவாகும்? இந்த விசித்திரமான சவாலை மும்பையைச் சேர்ந்த பிரணாய் ஜோஷி என்ற கன்டென்ட் கிரியேட்டர் நிஜமாக்கிக் காட்டியுள்ளார்.

மேலும் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரார் நிலையம் வரை, ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட கீழே சிந்தாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற சவாலை அவர் கையில் எடுத்தார்.

ரயில் பயணத்தின் போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பயணிகள் ஏறி, இறங்கும்போது தள்ளுமுள்ளு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ரயிலுக்குள் சக பயணிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும் சண்டையும் கூட ஏற்பட்டது.

“>

ஆனால், இந்த எந்தக் குழப்பத்திற்கும் அஞ்சாத பிரணாய், தனது முழுக் கவனத்தையும் கையில் இருந்த தண்ணீர் கிளாஸ் மீதே வைத்திருந்தார். சில நேரங்களில் ரயிலின் மூலையில் ஒட்டிக்கொண்டும், சில நேரங்களில் கூட்டத்திற்கு மேலே கையைத் தூக்கியும் தண்ணீரைப் பத்திரமாகப் பாதுகாத்தார். இதைப் பார்த்த சுற்றியிருந்த பயணிகள், இந்த இளைஞன் என்ன செய்கிறான் என்று ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.