சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகம், இன்றைய இளைஞர்களை எந்த அளவுக்கு விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி.
ஒரு ரயில்வே பாலத்தின் குறுகிய விளிம்பில் அமர்ந்து, தண்டவாளத்தில் ரயில் வரும்போது அதன் மிக அருகில் நின்று ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்கும் இளைஞன் ஒருவனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பாலத்தின் குறுகிய சுவரில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞன், ரயில் நெருங்கி வரும் நேரத்தில் எழுந்து நின்று போஸ் கொடுக்கிறான். ரயிலின் வேகம் மற்றும் காற்றின் அழுத்தத்தில் அவனது உடல்நிலை பலமுறை தள்ளாடுகிறது.
ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட, அவன் கீழே விழுந்து உயிரிழக்க நேரிடும் என்ற சூழல் இருந்தும், அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் கேமராவைப் பார்த்து அந்த இளைஞன் பிடிவாதமாகப் போஸ் கொடுக்கும் காட்சிகள் பார்ப்பவர்களையே உறைய வைக்கிறது.
இந்த வீடியோ ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்ட பிறகு, நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “சில லைக்குகளுக்காக மரணத்துடன் விளையாடுவது எந்த வகையில் நியாயம்?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
सारी रीलबाजी धरी रह जाएगी जिस दिन ट्रेन का झोंका और आदमी के बीच में संतुलन गड़बड़ हुआ
मां बाप के लिए अफसोस करने के अलावा कोई अन्य विकल्प नहीं होता हैं फिर इन बच्चों के लिए pic.twitter.com/GtQlGacZDx
— तेज़ तड़का (@tadka_tez) July 16, 2026
“>
இது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றம் என்பது மட்டுமல்லாமல், தற்கொலைக்குச் சமமான செயல் என்றும், சமூக வலைதள மோகம் இளைஞர்களிடமிருந்து நிதானத்தைப் பறித்து வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ரயில்கள் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் இது போன்ற ஸ்டன்ட்களில் ஈடுபடுவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இளைஞர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
