சிங்கப்பூரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றின் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களின் குடிமை உணர்வு மற்றும் பொறுப்புணர்வு குறித்த காரசாரமான விவாதத்தை இணையத்தில் மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி உள்ளடக்க உருவாக்குநரான ஜூஹி சிங், அங்குள்ள உலகின் முதல் மிதக்கும் ஆப்பிள் ஸ்டோர் அருகில் ஒரு வீடியோவை எடுத்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூ இதழ்கள் மற்றும் சிறிய குச்சிகளைத் தவிர வேறு எந்த ஒரு பிளாஸ்டிக் கழிவுகளுமே இல்லாமல் முற்றிலும் தூய்மையாக இருந்த அந்த நீர்நிலையில், காலியான ‘குர்குரே’ பாக்கெட் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது.இதனைக் கண்டு ஏமாற்றமடைந்த ஜூஹி சிங், “இதை இங்கே தண்ணீரில் பார்ப்பது மனதை நொறுக்கியது. இது இங்கே இருக்க வேண்டுமா? நாம் எங்கு வாழ்ந்தாலும் அல்லது பயணம் செய்தாலும், தூய்மையைப் பேணுவது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நம் ஒவ்வொருவருக்கும் நம்மைச் சுற்றியுள்ள சூழலுக்கும் இந்தப் பூமிக்கும் பொறுப்பு இருக்கிறது. நமது செயல்களையும், அவை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தன் நாட்டு மக்களுக்கு உருக்கமாக நினைவூட்டியுள்ளார். மேலும், “நீங்கள் தின்பண்டங்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணியாக இருந்தால், தயவுசெய்து எல்லா இடங்களிலும் இருக்கும் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துங்கள். இது போன்ற நடத்தை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் அவர் கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தக் குறிப்பிட்ட குர்குரே உறையை அங்குள்ள நீர்நிலைக்குள் வீசியது ஒரு இந்தியர் தானா என்பதைத் தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியவில்லை. இந்தச் சூழலில், ஜூஹி சிங்கின் இந்தத் பதிவு இணையத்தில் பரவி கலவையான கருத்துக்களைப் பெற்று வருகிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள் குப்பைகளை வீசுவது நாட்டின் பிம்பத்தைக் கெடுப்பதாக ஒரு தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், “ஆஹா, சிங்கப்பூர் கூட தப்பவில்லை; நாம் உண்மையிலேயே வெந்துபோன ஒரு சமூகம்” என்றும், “நாம் எங்குச் சென்றாலும் நமது அடையாளத்தை இப்படித்தான் விட்டு வருகிறோம்” என்றும் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram
“>
மற்றொரு தரப்பினரோ, அது குப்பைத் தொட்டியிலிருந்து காற்றில் பறந்து வந்திருக்கலாம் என்றும், இந்தச் சுவை சர்வதேச அளவில் கிடைப்பதால் இது உள்ளூர் தயாரிப்பாகக் கூட இருக்கலாம் என்றும் தங்களது மாற்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
