உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமோசா வாங்கவில்லை என்பதற்காக, ஒரு மனைவி தனது கணவனை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரையும் தாக்கிய சம்பவம் தற்போது பெரும் விவாதமாகி வருகிறது.
பிலிபிட்டைச் சேர்ந்த சிவம் மற்றும் சங்கீதா கடந்த மே 22ம் தேதி திருமணம் செய்து கொண்டிருந்தனர். தேனிலவு காலம் போல அமைதியாக கடந்த நான்கு மாதங்களில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீபத்தில் ஒரு மாலை நேரத்தில், சமோசா காரணமாக இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது.
அன்றைய மாலை சங்கீதா தனது கணவரிடம் “சூடான சமோசா” வாங்கி வருமாறு கேட்டுள்ளார். சிவம் சமோசா வாங்கச் சென்றபோது, பாக்கெட்டிலிருந்த பணம் தவறி விழுந்துவிட்டதால், சமோசா வாங்க முடியாமல் வெறுமனே திரும்பியுள்ளார். இதனால் சங்கீதா கோபமடைந்து வீட்டிலேயே முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து வந்து, கணவனையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் இத்துடன் முடிவடையாமல், பஞ்சாயத்திலும் கூட இரு குடும்பத்தினரும் முற்றிலும் சண்டையில் ஈடுபட்டனர்.
சண்டையின்போது, சங்கீதாவின் குடும்பத்தினர் பெல்ட், கட்டை கொண்டு சிவத்தை அடித்ததோடு மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரையும் தாக்கினர். இதில் , சிவத்தின் மைத்துனர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
पति घर नहीं ला पाया समोसे, पत्नी के घरवालों ने बोल दिया हमला
पीलीभीत में समोसे को लेकर एक घर में कोहराम मच गया. पत्नी के कहने पर पति समोसे घर नहीं ला पाया, जिस पर विवाद खड़ा हुआ. अगले दिन मामला और बढ़ गया और महिला ने अपने माता-पिता व चाचा के साथ मिलकर पति पर हमला बोल दिया.… pic.twitter.com/UKLJ2G2KpO
— NBT Hindi News (@NavbharatTimes) September 5, 2025
“>
சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கியிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. இது ஒரு உணவுப் பொருளுக்காக ஏற்பட்டிருக்கிறது என்பதே ஆச்சரியமாக உள்ளது.
சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிலிபிட்ட் காவல் நிலைய சிஓ பிரதிக் தஹியா கூறுகையில், “மாலையில் சண்டை ஏற்பட்டது, ஒருவர் காயமடைந்துள்ளார், விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார். சமோசா போல ஒரு சாதாரண உணவுப் பொருள், இத்தகைய பெரும் குடும்பக் கலவரத்தை உருவாக்கியிருப்பது சமூகத்திற்கே சிந்திக்க வைத்துள்ளது. உணர்வுகளை கட்டுப்படுத்தாமல், காரணமில்லாத கோபத்தில் செயல்படுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கான எடுத்துக்காட்டு இதுவாக இருக்கிறது.
