உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் நகரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளி, கையில் சிறுநீர் பையை (urine bag) தாங்கிக்கொண்டு மதுக்கடைக்குச் சென்று மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதை காரணமாக அவர் பின்னர் சாலையோரத்தில் மயங்கி விழுந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போதைப் பழக்கத்தால் அவதிப்பட்டிருந்த அந்த நபர், சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் ஷாஜகான்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை மதியம் அவர் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரிவிக்காமல் வெளியேறியதாக கூறப்படுகிறது.

 

அதன்பின், சௌக் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குள் உள்ள அஜீஸ்கஞ்ச் பகுதி மதுக்கடைக்கு அவர் வந்தார். தலையில் கட்டு, கையில் விகோ கவர் மற்றும் சிறுநீர் பை வைத்தபடி தள்ளாடியபடி மது வாங்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் நிலையைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் கடைக்குப் பக்கத்திலேயே மது அருந்தியதாகவும், சிறிது தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது குடும்பத்தினர் நீண்ட நேரமாக அவரைக் காணவில்லை என்பதால் தேடத் தொடங்கினர். பின்னர் சாலையோரத்தில் மயங்கி கிடந்த அவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஒருவரால் எடுத்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஷாஜகான்பூர் முழுவதும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.