தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் சாமானிய மக்களைக் கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளைத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஒப்பந்த ஆசிரியர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், “தவெக ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையுமின்றி தாமாகவே பணி நிரந்தரம் செய்யப்படுவர்” என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, நடுத்தரக் குடும்பங்களின் மின்சாரப் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும், தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் 100% குழாய்வழி குடிநீர் வசதி உறுதி செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அரசுப் பணிப் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான விஜய்யின் இந்த உத்தரவாதங்கள், குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.