தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

மேடையில் தலைவர் விஜய் தோன்றி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த தொண்டர்கள் விஜய்யின் தோளில் இருந்த  துண்டு சற்று சரிந்து இருப்பதைக் கண்டு, “அண்ணே.. அண்ணே.. துண்டை இப்படிப் போடுங்கண்ணே” என்று உரக்கக் கத்தினர்.

தொண்டர்களின் அன்பான குரலைக் கேட்ட விஜய், உடனே பேச்சைச் சற்று நிறுத்தி, புன்னகைத்தவாறே தனது கண்களாலேயே அவர்களுக்குப் பதில் அளித்தார். பின்னர், அவர்கள் சொன்னது போலவே தோளில் இருந்த துண்டைச் சரி செய்து அழகாக மீண்டும் போட்டுக் கொண்டார்.

“>

 

விஜய்யின் இந்த எளிமையான மற்றும் அன்பான செயல் அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேடையிலேயே தொண்டர்களின் சொல்லுக்கு மதிப்பளித்த விஜய்யின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘தளபதி’ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.