சென்னை தாம்பரம் மாநகராட்சிகு உட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருகிறது. திருவான்மியூர் பகுதியை சேர்ந்த தனியார் இஎம்இ எனும் நிறுவனம் தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்பந்தம் பெற்று பணி செய்து வருகிறார்கள்.

இதற்காக அனகாபுத்தூர் பக்தவச்சலம் பகுதி வழியே அடிக்கடி லாரியில் மணல், ஜல்லி போன்றவை எடுத்து சென்றுள்ளனர். தொடர்ந்து லாரிகள் அவ்வழியாக செல்வதை பார்த்த அப்பகுதியின் 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ராவின் கணவர் தமிழ் குமரன், அந்த லாரிகளை மடக்கி உள்ளார். அதோடு அவ்வழியாக செல்வதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறியதோடு, தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதுபற்றி தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் கண்ணன் என்பவர் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி திமுக கவுன்சிலர் சித்ராவின் கணவர் தமிழ் குமரறை காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். ஆளும் கட்சி திமுகவாக இருந்தாலும், அந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.