தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கக் கூடாது என்று அனைத்து பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோரிடம் கட்டாய நன்கொடை பெறுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, எந்த பள்ளியிலும் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய நன்கொடை வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூலிப்பது தெரியவந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.