குஜராத் மாநிலம் சூரத்தின் சலாபத்புரா பகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு நெகிழ்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடிச் சென்றுள்ளார். சைக்கிளைக் காணாமல் அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில், அடுத்த நாளே அந்தப் பெண் திருடிய சைக்கிளுடன் மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பியுள்ளார். யாரும் பார்க்காத நேரத்தில் திருடப்பட்ட சைக்கிளை, அது இருந்த அதே இடத்தில் மிகவும் பத்திரமாக அந்தப் பெண் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
In a rather unusual and heartwarming incident, a woman who had allegedly stolen a bicycle in Surat’s Salabatpura area returned it the very next day and was caught on CCTV apologizing for her actions.
According to reports, the woman had stolen a bicycle that was parked in the… pic.twitter.com/Y4pLe8cKvg
— Hate Detector 🔍 (@HateDetectors) June 16, 2026
சைக்கிளை நிறுத்திய பிறகு, அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவை நேரடியாகப் பார்த்த அந்தப் பெண், தனது தவறை உணர்ந்து கேமராவை நோக்கி கைகளைக் கூப்பி சைகை மூலம் உருக்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விசித்திரமான மனமாற்றம் மற்றும் மன்னிப்பு கேட்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தவறு செய்வதை விட, செய்த தவறை உணர்ந்து திருந்துவதே பெரிய விஷயம் எனக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் நேர்மையைப் பாராட்டி இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
