நாடு முழுவதும் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு அதற்கு மத்திய அரசு புதிய பெயர் வைத்ததோடு 125 நாட்களாக வேலையை உயர்த்துவதாகவும் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்த திட்டத்திற்கு இனி மாநில அரசும் பங்களிப்பு தரவேண்டும் என கூறியுள்ள நிலையில் இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லையா என விமர்சித்து அவர் அறிக்கை வெளியிட்ட நிலையில் இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தத் திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே,
ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண். 100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா என்று பதிவிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி… https://t.co/q1apv2Mk79 pic.twitter.com/48bbrFhKpe
— K.Annamalai (@annamalai_k) December 17, 2025
