ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்பது குறித்து முதல் கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரயில் விபத்து குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதை காவல்துறையினர் கண்காணித்தனர்.

இதனையடுத்து ரயில் விபத்து குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தவறான நோக்கம் உள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.