தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினி, மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டது.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்து உள்ளார். இதை தன் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ள ரஜினி, “முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பழம்பெரும் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ் உடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு இப்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.