விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது “பிச்சைக்காரன் 2” படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி டைரக்டும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உட்பட பலர் நடித்து உள்ளனர். இன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் “கள் ஊறும் பூவே” பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி “இந்த பாட்டோட கடைசி shot-ல தான் எனக்கு accident ஆனது. அந்த பாடல் இதோ உங்களது பார்வைக்கு “கள் ஊறும் பூவே” பிச்சைக்காரன்-2 என பதிவிட்டுள்ளார். பிச்சைக்காரன் -2 சூட்டிங்கின்போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.