தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உச்சம் பெற்றவர். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த மக்கள் மத்தியில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே நடிகர் குஷ்பூ சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் 13 வயதில் எடுத்த புகைப்படத்தையும் தற்போது 52 வயதில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் குஷ்பூ இவ்வளவு அழகா இருக்காங்களே என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.