ஐவரி கோஸ்ட் அணிக்காக கால்பந்து விளையாடும் முஸ்டபா சிலா, விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 21 வயதான இவர் லீக் 1 எனப்படும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விளையாடும் போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலக்க வைத்துள்ளது.