மும்பையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விராரில் கணேஷ் சிலையை மூழ்கடிக்க க்ரீக்கில் இறங்கிய இரண்டு ஆண்களில் ஒருவர், சிவப்பு சட்டை அணிந்தவர், திடீரென நிலைதடுமாறி வலுவான நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார். அவர் மிதப்பதற்கு போராடும்போது, நீரோட்டம் அவரை மேலும் இழுத்துச் செல்கிறது. ஆனால், ஆச்சரியமாக, சிலையை பிடித்திருந்த மற்றொரு நபர் அமைதியாக இருந்தாரே தவிர தனது தோழனை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக, அவர் சிலையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

இந்த செயல் சமூக ஊடகங்களில் காணொளியாக வெளியாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது, பலர் மனித உயிரை விட சிலையை மதித்ததாக குற்றம் சாட்டினர்.வீடியோ திடீரென முடிவடைந்ததால், நீரில் தத்தளித்தவரின் நிலை குறித்து பார்வையாளர்கள் கவலையடைந்தனர். ஆனால், பின்னர் வெளியான மற்றொரு வீடியோவில், அங்கிருந்த உள்ளூர் மக்கள் அவரை பத்திரமாக காப்பாற்றியதாக புனே பல்ஸ் அறிக்கை தெரிவித்தது.

அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வு சிலை மூழ்கடிக்கும் நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.