’ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளனர். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்த்து ஒரு முடிவை எடுத்தாலும், அந்த முடிவுகள் மும்பையில் உள்ள தலைமைச் சென்சார் போர்டைக் கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, ஒரு படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மும்பையில் உள்ள அதிகாரிகளுக்கே உள்ளது என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஒரு படம் அனைத்து மக்களாலும் பார்க்கத் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்கவே தணிக்கை வாரியம் இருக்கிறது என்றும், இதில் மும்பை தலைமையகத்தின் முடிவே இறுதியானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த அதிகாரப் பகிர்வு குறித்த நீதிபதிகளின் கருத்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு எந்த மாதிரியான பாதிப்பை அல்லது பலத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாதங்கள் இன்னும் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கின்றன
