சமூக ஊடகங்களில் லைக்குகளையும், வியூஸ்களையும் அள்ள வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது. இளைஞர் ஒருவர் எரியும் எரிமலையின் விளிம்பிற்கு மிக அருகில் சென்று ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்துள்ளார்.

“>

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் தவறி, அவர் நிலைதடுமாறும் அச்சுறுத்தும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ரீல்ஸ் மோகத்தால் ஒருவரின் உயிர் எந்த அளவிற்கு ஆபத்தில் முடிகிறது என்பதை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதனால் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த ‘வைரல் வீடியோ’ பார்ப்பவர்களின் அடியவயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் உள்ளது. சற்றே நிதானம் இழந்திருந்தால் கூட அந்த இளைஞரின் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் வெறும் ஒரு சில நிமிடப் புகழுக்காகவும், சமூக வலைத்தளப் பாராட்டுகளுக்காகவும் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை இப்படிப் பணையம் வைப்பது முட்டாள்தனமானது என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் லைக்குகளை விட மனித உயிரே மிகவும் முதன்மையானது என்பதை உணர்ந்து, இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடுவதை இளைஞர்கள் உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.