கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ ஆதனூர் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் பாண்டியன் விவசாய நிலத்தில் இருக்கும் மின் மோட்டார் பழுதை சரி செய்ய சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாண்டியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டியன் உடலை பார்த்து அவர்கள் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.