சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் விமானப் பயணத்தின்போது இருமுடி கட்டை தங்களுடன் எடுத்துச் செல்வது குறித்து நிலவி வந்த சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமமோகன் நாயுடு தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதுடன், இதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.