ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு ஏர்டெல் நிறுவனம் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டவுடன் பழைய சலுகைகளின் விலையையும் மாற்றி உள்ளது. ஏர்டெல் 49 ரூபாய் மற்றும் 99 ரூபாய் சலுகைகளின் விலை முறையே 39 ரூபாய் மற்றும் 79 ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டு சலுகைகளும் ஐபிஎல் 2024 க்குக்காக மாற்றப்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதில் 39 ரூபாய் சலுகை 20 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டிவுடன் வழங்கப்படும். இந்த டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64kbps ஆக குறைக்கப்படும்.

ஏர்டெல் 49 ரூபாய் சலுகையில் வின்க் பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படும். இதில் நாள் ஒன்றுக்கு அன்லிமிடெட் டேட்டாவாக அதிகபட்சம் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 79 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா அதிகபட்சம் 20 ஜிபி 2 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படும். இந்த சலுகையின் மூலமாக பயனர்களுக்கு 40 ஜிபி டேட்டா கிடைப்பது மட்டுமல்லாமல் முதல் நாள் 20 ஜிபி முடிந்ததும் டேட்டா வேகம் 64kbps ஆக குறைக்கப்படும்.