இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று வாங்குவதில் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இது போன்ற முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்குவதற்கான முறையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வருமாறு ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இனி முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்க தேவையில்லை எனவும் upi மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.