தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். த.வெ.க. ஆட்சிக்கு வராது என்று பலரும் விமர்சித்த நிலையில், தற்பொழுது ஆட்சியைப் பிடித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களின் ஆட்சி ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, 50 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கிலும் அரசு மிக விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தோழமைக் கட்சிகளைப் பண்ணையார் மனப்பான்மையுடன் திமுக அணுகுவதாகவும், மக்கள் பாதுகாப்பிலும் நீதியிலும் தங்களின் அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
