ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘படையப்பா’ திரைப்படத்தின் கதையை, இப்போதுள்ள 2K தலைமுறை (Generation Z) எப்படிப் பார்க்கிறது என்று கூறும் ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில், ஹீரோவின் முடிவுகளை விமர்சித்து, “ஐடியா இல்லாத படையப்பா” என்று கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவின் முக்கிய விமர்சனம் இதுதான்: “படையப்பா, வில்லி நீலாம்பரியை (ரம்யா கிருஷ்ணன்) முறையாகத் திருமணம் செய்துகொண்டு, அவளுடைய சொத்து, கார்கள், பிசினஸ் என்று எல்லாவற்றையும் அனுபவித்து பணக்கார (Rich) வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்திருக்கலாம்.”
ஆனால், படையப்பாவோ அவ்வாறு செய்யாமல், பழைய ‘பூமர்’ தலைமுறையினரைப் போலக் கஷ்டப்பட்டு உழைத்து, படிப்படியாக முன்னேற நினைக்கிறார். இந்தக் கருத்தைப் பார்த்த ரசிகர்கள், “டேய், யாருடா நீங்க எல்லாமும்?” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
