பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கதீஜா, ரஜிமா என்ற இரு மகள்களும் அமீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஏ.ஆர் ரகுமான் இசை குழுவிலுள்ள துணைப்பாடகி மோகினி டே என்பவரும் தன் கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இவருடைய கணவர் இசையமைப்பாளர் மார்ஷ் ஹார்ட்டச்.
இவர்கள் இருவரும் பிரிவதாக சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ள நிலையில் பாடல்களில் மட்டும் ஒன்றாக பணிபுரிவோம் என்றும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து அறிவித்த அதே நேரத்தில் அவருடைய இசைக் குழுவில் இடம் பெற்ற பாடகி மோகினி டே என்பவரும் விலாவாரத்து அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏ.ஆர். ரகுமான் மற்றும் சாய்ரா விவாகரத்துக்கு மோகினி டே தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை சாய்ரா பானுவின் வழக்கறிஞர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
