ஏற்றுமதி விதிமுறைகளும் சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி தமிழக அரசு சார்பாக வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் குறித்த பயிற்சி வருகின்ற ஜனவரி 31 முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை பயிற்றுவிக்கப்படும். இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை பெற http://www.editn.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044 22252081, 22252082  ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.